"முதலமைச்சர் இரட்டை வேடம் போட வேண்டாம்" - கே.என். நேரு
ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இரட்டை வேடம் போட வேண்டாம் என தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இரட்டை வேடம் போட வேண்டாம் என தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கியது திமுக தலைவர் ஸ்டாலின் என முதலமைச்சர் அபாண்ட பொய் சொல்வதாக கண்டனம் தெரிவித்துள்ளார். 18 ஆயிரத்து 650 கோடி ரூபாயில், 341 கிணறுகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை கேட்காத முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினை குறை சொல்வதா என கே.என். நேரு கேள்வி எழுப்பி உள்ளார். ஹைட்ரோகார்பன் பணிகளுக்கு ஒருபுறம் ஒத்துழைப்பும், மறுபுறம் வேளாண் மண்டலம் என அறிவிப்பும் என அ.தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுவதாக கே.என். நேரு விமர்சித்துள்ளார்.
Next Story

