வேலை வாங்கி தருவதாக ரூ. 7 லட்சம் மோசடி - தந்தை, மகன் இருவர் கைது
பதிவு : பிப்ரவரி 10, 2020, 01:45 AM
ஈரோடு அருகே போலி நியமன ஆணை தயாரித்து பேராசிரியரிடம் 7 லட்ச ரூபாய் மோசடி செய்த தந்தை மகனை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு, பெரிய சேமூர் சோழா  நகரைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன்.  தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் இவர்,  அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். இவரை அணுகிய சிலர் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய கோகுல கண்ணன் சுமார் 7 லட்சம் ரூபாயை அவர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் பணி நியமன ஆ​ணை ஒன்றை அந்த கும்பல் கோகுல கண்ணனிடம் கொடுத்துள்ளது. ஆனால் அந்த நியமன ஆணை போலி என்பது தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் நாடார்மேடு, திலகர் வீதியைச் சேர்ந்த கார்த்திகேயன் அவரது தந்தை ரவிக்குமாரை சூரம்பட்டி போலீசார் கைதுசெய்தனர். தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

664 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

197 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

149 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

55 views

பாம்பை ஏவி மனைவியை கொன்ற கணவன் - சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை

கேரளாவில், பாம்பை விட்டு மனைவியை கொன்ற கணவனை சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

28 views

பிற செய்திகள்

சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி வாங்கி சென்ற இருவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே சட்டவிரோதமாக கைத்துப்பாக்கியை வாங்கிக்கொண்டு சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

0 views

செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

3 views

தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி மீது வழக்கு - தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் நடவடிக்கை

கும்பகோணத்தில் அனுமதியின்றி தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

3 views

மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் கண்ணீர் மல்க மனு - "வங்கி தவணை செலுத்த கூறி திட்டுவதாக புகார்"

ரிசர்வ் வங்கி உத்தரவை மீறி கடன் தவணை செலுத்தச் சொல்லி தகாத வார்த்தைகளால் பேசி வரும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.

8 views

ஊட்டியில் கோமாவில் இருந்த சிறுத்தைக்கு நினைவு திரும்பியது

ஊட்டியில் கோமா நிலையிலிருந்த சிறுத்தை புலிக்கு, 12 நாட்களுக்கு பிறகு நினைவு திரும்பியது.

11 views

நாசா செல்ல விழுப்புரம் இளைஞர் தேர்வு - அரசு உதவ வேண்டும் என கோரிக்கை

சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில், வெற்றி பெற்ற விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்த மாணவன், தான் அமெரிக்கா செல்ல உதவ வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.