4 நாட்கள் சோதனை : ரூ. 77 கோடி, 1.25 கிலோ தங்கம் பறிமுதல் - வருமான வரித்துறை தகவல்

அன்புச்செழியன் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 4 நாட்களாக சோதனை நடைபெற்ற நிலையில், அன்புச்செழியன் 165 கோடி ரூபாய் வருவாய் ஏயப்பிற்கு வரி செலுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4 நாட்கள் சோதனை : ரூ. 77 கோடி, 1.25 கிலோ தங்கம் பறிமுதல் - வருமான வரித்துறை தகவல்
x
ஏஜிஎஸ் பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 5ஆம் தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்ற சோதனை நேற்று நிறைவு பெற்றது. முதலில் 300 கோடி ரூபாய் வருவாய்க்கு வரி ஏய்ப்பு நடந்ததாக கூறப்பட்ட நிலையில் அன்புச்செழியன் வீட்டில் இருந்து 77 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இப்போது மேலும் பல புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அன்புச்செழியன் வீட்டில் இருந்து ஒன்றே கால் கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அன்புச்செழியன் 165 கோடி ரூபாய் வருவாய் ஏய்ப்புக்கு வரி செலுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தரப்பில்  தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்