"குரூப்-2 தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை" - டி.என்.பி.எஸ்.சி அறிக்கை மூலம் விளக்கம்
குரூப்- 2 மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வுகளில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
குரூப்-2 தேர்வில் 1997 ஆம் ஆண்டு பிறந்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருப்பதாக எழுந்த சந்தேகத்தால், இது குறித்த ஆவணங்கள் அனைத்தும் சரிப்பார்க்கப்பட்டதாகவும், அதில் எந்த தவறுகளும் நடக்கவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வுகளில் ஒரே மையத்தில் இருந்து 33 பேர் தேர்வு செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், அவர்கள் வெவ்வேறு மையங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
Next Story

