அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை : மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்

சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மலைவாழ் மக்கள் திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை : மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்
x
சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மலைவாழ் மக்கள்  திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீரகநல்லூர் பகுதியை  சேர்ந்த 50க்கும் மேற்பட்ட  இருளர் இன மக்கள் குடும்பத்துடன் அங்கேயே  சமைத்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்