குல தெய்வ கோவிலில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வழிபாடு
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் செண்பகதோப்பில் உள்ள அவரது குல தெய்வ கோவிலில் தரிசனம் மேற்கொண்டார்.
தமிழக நிதிநிலை அறிக்கை வரும் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட உள்ளது. இதையொட்டி, துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மற்றும் செண்பகதோப்பில் உள்ள அவரது குல தெய்வ கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். மேற்குதொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான செண்பகத்தோப்பில் உள்ள வனப்பேச்சியம்மன் கோவிலில் 108 நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Next Story

