அன்புச்செழியன் வீடு மற்றும் ஏஜிஎஸ் பட தயாரிப்பு நிறுவனத்தில் நிறைவடைந்தது வருமான வரித்துறை சோதனை
பதிவு : பிப்ரவரி 08, 2020, 12:25 PM
ஏஜிஎஸ் பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் இல்லத்தில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.
திநகரில் உள்ள ஏஜிஎஸ் பட தயாரிப்பு அலுவலகத்தில், கடந்த 5ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கிய வருமான வரித்துறை சோதனை, நேற்று மாலை 4 மணியாடு நிறைவு பெற்றது. இதேபோல், 
திநகரில் உள்ள பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில், கடந்த 5ஆம் தேதி காலை 11.30 மணிக்கு தொடங்கிய வருமான வரித்துறை சோதனை, இன்று அதிகாலை 02.30 மணி வரை நடைபெற்று முடிந்தது. அன்பச்செழியன் வீட்டில் இருந்து 77 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையின் போது, பிகில் பட வசூலில் 300 கோடி ரூபாய் வருமானம் மறைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சோதனையில் கைப்பெற்றப்பட்ட பணம், பண பரிவர்த்தன ஆவணங்கள், பென் டிரைவ் உள்ளிட்டவைகளை வருமான வரித்துறையினர் எடுத்து சென்றனர். 

பிற செய்திகள்

காடுவெட்டி குரு மருமகனுக்கு அரிவாள் வெட்டு - தனியார் மருத்துவமனையில் அனுமதி

ஜெயங்கொண்டத்தில், காடுவெட்டி குரு மருமகனின் சகோதரர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 views

முகம் காணாத 10 மாத இன்ஸ்டாகிராம் காதல் - காதலி பேச மறுத்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காமல் இன்ஸ்டாகிராம் மூலமாக காதலித்த காதலி பேச மறுத்ததால், இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

4 views

ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம், இன்று தீர்ப்பளிக்கிறது.

67 views

மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் கண்ணீர் மல்க மனு - "வங்கி தவணை செலுத்த கூறி திட்டுவதாக புகார்"

ரிசர்வ் வங்கி உத்தரவை மீறி கடன் தவணை செலுத்தச் சொல்லி தகாத வார்த்தைகளால் பேசி வரும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.

11 views

எல்லையில் சீன ராணுவம் குவிப்பு எதிரொலி - ராணுவ தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

முன்னதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

9 views

ஊட்டியில் கோமாவில் இருந்த சிறுத்தைக்கு நினைவு திரும்பியது

ஊட்டியில் கோமா நிலையிலிருந்த சிறுத்தை புலிக்கு, 12 நாட்களுக்கு பிறகு நினைவு திரும்பியது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.