கோவையில் பரவும் புதுவகை போதை பொருள் - அடிமையாகும் கல்லூரி மாணவர்கள்

கோவையில் புதுவகையான போதை பொருட்களை பயன்படுத்தியதாக கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் பரவும் புதுவகை போதை பொருள் - அடிமையாகும் கல்லூரி மாணவர்கள்
x
எல்.எஸ்.டி, என்ற இந்த புதுவகையான போதை பொருள் சதுர காகிதம் போல உள்ளது. இதில் போதை திரவம் தடவி 2 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனை நாக்கில் ஒட்டிக்கொள்ளும் போதை ஆசாமிகள் 8 மணி நேரம் வரை ஒரு புதிவிதமான போதை உண்டாவதாக கூறுகின்றனர். இதேபோல எம்.டி.எம்.ஏ எனப்படும் போதை பொருள் சிலேட்டில் எழுத பயன்படுத்தபடும் பல்பம் போல உள்ளது. இது ஒரு கிராம் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனை எடை போடுவதற்கும் நவீன எலக்ட்ரானிக் எடை மிஷின் பயன்படுத்தப்படுகிறது. இந்த போதை பொருட்களில் துர்நாற்றம் வீசாது என்பதால் மாணவர்களும் சகஜமாக இதனை பயன்படுத்திவருவதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கூறுகின்றனர். இது தொடர்பாக 4 மாணவர்கள் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்