பட்ஜெட்டுக்கு பிறகு நகர்புற தேர்தல்..? : தமிழக அரசு ஆலோசனை

பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பின், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த, தமிழக அரசு, திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
பட்ஜெட்டுக்கு பிறகு நகர்புற தேர்தல்..? : தமிழக அரசு ஆலோசனை
x
பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பின், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த, தமிழக அரசு, திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்கள் தவிர மற்ற பகுதிகளில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்று, முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. இதை தொடர்ந்து,  மாநகராட்சி கவுன்சிலர், மேயர், நகராட்சி கவுன்சிலர்கள், தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்தது. இதை தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின், தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்