பாஜக எம்பிக்கள் சிலர் முரட்டுத்தனமாக நடந்ததாக சபாநாயகரிடம் மாணிக்கம் தாகூர் புகார்

மக்களவையில் சில பாஜக எம்பிக்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் புகார் அளித்துள்ளளார்.
பாஜக எம்பிக்கள் சிலர் முரட்டுத்தனமாக நடந்ததாக சபாநாயகரிடம் மாணிக்கம் தாகூர் புகார்
x
மக்களவையில் சில பாஜக எம்பிக்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம்  விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் புகார் அளித்துள்ளளார். பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் அவதூறு கருத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது கண்டனத்தை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்பிக்கள், அவையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். அப்போது பூசன் சரண் சிங் உள்ளிட்ட சில ஆளும் கட்சி எம்பிக்கள் தம்மை முரட்டுத்தனமாக பிடித்து இழுத்ததாகவும், இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் புகார் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்