"முருகுமாறன் எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றது செல்லும்" - திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
87 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக எம்.எல்.ஏ. முருகுமாறன் வென்றது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிட்ட திருமாவளவன் 87 வாக்குகளில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்து திருமாவளவன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில்,102 தபால் வாக்குகளை நிராகரித்தது குறித்தும் குறிப்பிட்டிருந்தார். தபால் வாக்குளை ஆய்வு செய்த பின், வழக்கை தள்ளி வைத்திருந்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன், முருகுமாறனின் வெற்றிச் செல்லும் என கூறி, திருமாவளவனின் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தார்.
Next Story

