"கடந்த 4 ஆண்டுகளில் 480 துணை மின் நிலையங்கள் அமைப்பு" - மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தகவல்
கடந்த 4 ஆண்டுகளில் 480 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் 480 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். திருச்செங்கோடு அருகே உள்ள ஏமா பள்ளி பகுதியில், 110 கிலோ வாட் துணை மின்நிலைய சோதனை ஓட்ட நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமிழ்நாடு மின்சார வாரியம், ஆண்டிற்கு 60 துணைமின் நிலையங்கள் என்ற நிலை மாறி,கடந்த 4 ஆண்டுகளில் 480 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 119 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தங்கமணி தெரிவித்தார்.
Next Story

