"தனியார் பள்ளி மோகம் - அரசு பள்ளியில் படிக்க மாணவர்கள் இல்லை" : அமைச்சர் பாஸ்கரன் கருத்து
அனைத்து பகுதிகளிலும் அரசுப் பள்ளிகள் இருந்தும் தனியார் பள்ளிகளின் மீதான பெற்றோர்களின் மோகம் காரணமாக அரசுப்பள்ளிகளில் படிக்க மாணவர்கள் இல்லை என அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்
அனைத்து பகுதிகளிலும் அரசுப் பள்ளிகள் இருந்தும் தனியார் பள்ளிகளின் மீதான பெற்றோர்களின் மோகம் காரணமாக அரசுப்பள்ளிகளில் படிக்க மாணவர்கள் இல்லை என அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார். சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இலவச மிதிவண்டி வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர், 4.43 கோடி ரூபாய் மதிப்பில்11 ஆயிரத்து 404 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், சைக்கிள், லேப்டாப் என அனைத்தும் அரசு இலவசமாக வழங்கினாலும் கூட அதனை முறையாக பயன்படுத்தாமல் மக்கள் அலட்சியம் செய்வதாக தெரிவித்தார்.
Next Story

