பணம், பத்திரத்தை ஆட்டோவில் தவறவிட்ட முதியவர் : நேர்மையாக போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்
தேனி மாவட்டம் மாயாண்டிபட்டியை சேர்ந்த விவசாயி அம்மாவாசி, 74 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்கான வைப்பு நிதி பத்திரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் பயணித்துள்ளார்.
தேனி மாவட்டம் மாயாண்டிபட்டியை சேர்ந்த விவசாயி அம்மாவாசி, 74 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்கான வைப்பு நிதி பத்திரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் பயணித்துள்ளார். ஆண்டிப்பட்டியில் இறங்கிய அவர், பணம் மற்றும் வைப்புநிதி பத்திரத்தை ஆட்டோவிலேயே மறந்து வைத்துவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் பணம் தொலைந்து போனதை அறிந்த அம்மாவாசி, அது குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனர் அழகர்சாமி, தனது ஆட்டோவில் இருந்த பணம் மற்றும் பத்திரத்தை போலீசில் ஒப்படைதுள்ளார். இதனையடுத்து பணம் மற்றும் பத்திரம் அம்மாவாசியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் நேர்மையாக நடந்துகொண்ட அழகர்சாமியை பாராட்டிய போலீசார், அவருக்கு சன்மானம் வழங்கி கவுரவித்தனர்.
Next Story

