பொள்ளாச்சி சம்பவத்தில் அடிதடி வழக்கில் ஆதாரம் இல்லை : மேல் நடவடிக்கையை கைவிடுவதாக சிபிஐ அறிக்கை
பொள்ளாச்சி வழக்குடன் தொடர்புடைய அடிதடி வழக்கு விசாரணை வரும் 20ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வழக்குடன் தொடர்புடைய அடிதடி வழக்கு விசாரணை வரும் 20ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்ட நிலையில் போதிய ஆதாரம் இல்லாததால் மேல்நடவடிக்கையை கைவிடுவதாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் இதற்கு மனுதாரர் தரப்பில் ஆட்சேபணை தெரிவிக்க அவகாசம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 20ஆம் தேதி ஒத்திவைத்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story

