பண்ணை வீட்டில் விடிய விடிய சோதனை : பிகில் பட சம்பளம் பற்றி விஜய்யிடம் அதிகாரிகள் கேள்வி

சென்னை அடுத்த பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் பண்ணை வீட்டில் இரவிலும் வருமான வரி சோதனை தொடர்ந்து நீடித்தது.
பண்ணை வீட்டில் விடிய விடிய சோதனை : பிகில் பட சம்பளம் பற்றி விஜய்யிடம் அதிகாரிகள் கேள்வி
x
நேற்று மாலை 4.30 மணி அளவில், விஜய்யின் பண்ணை வீட்டிற்கு வந்த  வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இதனிடையே நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை அதிகாரிகள் , காரில் பண்ணை வீட்டிற்கு இரவு 8.45 மணிக்கு அழைத்து வந்தனர். பின்னர் விஜய்யிடம் 'பிகில்' படத்திற்காக ஏ.ஜி.எஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய சம்பள தொகை குறித்தும், பண்ணை வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களை காட்டியும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்த இரவிலும் சோதனை நீடிக்கும் நிலையில் , துப்பாக்கி ஏந்திய போலீசார் பண்ணை வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்