சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் கொலை வழக்கு : 4 பேர் நீதிமன்றத்தில் சரண்
ஓசூரில் கடந்த 2ஆம் தேதி திமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் மன்சூர்அலி என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
ஓசூரில் கடந்த 2ஆம் தேதி திமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் மன்சூர்அலி என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், வழக்கில் தொடர்படையதாக கருதப்படும், 4 பேர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து, நீதிபதி ஷபினா முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் நால்வரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story

