தமிழ் முறைப்படி நிச்சயதார்த்தம் செய்த வடமாநில குடும்பத்தினர்
ராமேஸ்வரத்தில் வடமாநில குடும்பத்தினர் இன்று தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
ராமேஸ்வரத்தில் வடமாநில குடும்பத்தினர் இன்று தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். ஐதராபாத் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வந்த மாப்பிள்ளை மற்றும் பெண் குடும்பத்தினர் ராமநாதசுவாமி கோயில் மண்டபத்தில் கூடினர். அப்போது அவர்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டுசேலை, வேஷ்டி சட்டைகளை அணிந்து வந்திருந்தனர். அப்போது, நாதஸ்வரம், தவில் முழங்க தாம்பாளத் தட்டுகளை குடும்ப பெரியோர்களின் முன்னிலையில் இருவீட்டாரும் மாற்றிக் கொண்டு திருமணத்தை நிச்சயம் செய்தனர்.
Next Story

