தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் கருத்து கூறிய ரஜினி : வரும் 25-ஆம் தேதி நேரில் ஆஜராக ஒருநபர் ஆணையம் சம்மன்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், தனிநபர் ஆணையத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் கருத்து கூறிய ரஜினி : வரும் 25-ஆம் தேதி நேரில் ஆஜராக ஒருநபர் ஆணையம் சம்மன்
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றபோது கலவரம் வெடித்தது. இதன்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்த 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூற தூத்துக்குடிக்குச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், பேரணியில் சமூக விரோதிகள் ஊடுருவியதாகவும், அது தமக்கு தெரியும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். 

இது குறித்து ரஜினியிடம் விசாரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரி வந்தனர். துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம்,  வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு, நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்