அவதூறு வழக்கு விசாரணை - சீமான் நேரில் ஆஜர்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பிப்ரவரி 18ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் குறித்து, அவதூறாக பேசியதாக சீமான் மீது சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக சீமான், முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு நேரில் இன்று ஆஜரானார். அப்போது அவரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டன. இதனையடுத்து, சீமான் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய வழக்கை வரும் 18 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
Next Story

