6 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை - முன்னாள் எம்எல்ஏ தலைமையில் சாலை மறியல்
வேடசந்தூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்தில் உண்மை குற்றவாளியை கைது செய்யக்கோரி மறியல் போராட்டம் நடைபெற்றது.
வேடசந்தூர் அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், அதே ஊரைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவரை போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும், டிராக்டரில் இருந்து சிறுமி, கீழே விழுந்ததாக பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில், சிறுவனின் சகோதரரும், டிராக்டர் உரிமையாளர் உமா சேகர் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், டிராக்டர் உரிமையாளரான உமா சேகரையும், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யக்கோரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தலைமையில், திண்டுக்கல் - பழனி சாலையில், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
Next Story

