சாலையில் வலம் வரும் காட்டு யானைகள் : சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல அறிவுரை

பொள்ளாச்சி அருகே சாலையில் வலம் வரும் காட்டுயானைகளால், பொதுமக்கள் கவனமாக பயணிக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சாலையில் வலம் வரும் காட்டு யானைகள் : சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல அறிவுரை
x
பொள்ளாச்சி அருகே சாலையில் வலம் வரும் காட்டுயானைகளால், பொதுமக்கள் கவனமாக பயணிக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, ஆழியாறு சோதனை சாவடி அருகே சுற்றித்திரிந்த காட்டுயானை ஒன்று, பொருள் விளக்கம் மையத்தில் புகுந்து, விளம்பர பலகைகளை சேதப்படுத்தியது. பின்னர், அந்த யானை, மற்றொரு யானையுடன், சேர்ந்து வந்து நீண்ட நேரம் ஆழியார் - வால்பாறை சாலையில் முகாமிட்டதால்  பரபரப்பு நிலவியது. எனவே, ஆழியார் அணைக்கு யானைகள் தண்ணீர் குடிக்க வருவதால், சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள், வாகனங்ளில் இருந்து இறங்கி  புகைப்படம், எடுக்கவேண்டாம் என வனத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்