புழல் சிறைக்குள் புழங்கும் கஞ்சா - ஓயாத களேபரம்
சென்னை புழல் சிறையில், கஞ்சா வைத்திருந்ததை காட்டி கொடுத்ததாக தாக்கப்பட்ட கைதி, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை புழல் சிறையில், கஞ்சா வைத்திருந்ததை காட்டி கொடுத்ததாக தாக்கப்பட்ட கைதி, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிறைகளில் சட்டவிரோத பொருட்கள் வைத்திருப்பதாக எழும் புகார்களை தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதன் ஒருபகுதியாக, புழல் மத்திய சிறையில், ராஜேஷ் என்பவரை சக கைதிகள் 6 பேர் பலமாக தாக்கியுள்ளனர். காயமடைந்த அவர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தாக்குதலில் ஈடுபட்ட பிரசாத், சரண்குமார், வினோத்குமார், முகமது ரிஸ்வான், ஆகாஷ், கணேஷ்குமார் ஆகிய 6 பேர் மீது, புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Next Story

