போக்குவரத்து காவலரின் லஞ்ச வேட்டை ? : ஆதாரத்துடன் விளக்கும் போலீஸ் - அதிர்ச்சி வீடியோ

மதுரையில் போக்குவரத்து காவலர்களின் லஞ்ச வேட்டை வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
போக்குவரத்து காவலரின் லஞ்ச வேட்டை ? : ஆதாரத்துடன் விளக்கும் போலீஸ் - அதிர்ச்சி வீடியோ
x
மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் மையம் அருகே பிருந்தாவனம் என்பவர் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த போது போலீசாரிடம் பிடிபட்டார். அவருக்கு புதிய போக்குவரத்து சட்ட விதிப்படி, 10 ஆயிரம் ரூபாய்  ஸ்பாட் ஃபைனாக  வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் அபாரதம் கட்டிய பின்னரும் போக்குவரத்து காவலர் அரிச்சந்திரன் பறிமுதல் செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை கொடுக்க மறுத்துள்ளார். ஓட்டுநர் உரிம‌ம் வேண்டுமென்றால் 500 ரூபாய் கூடுதலாக தர வேண்டும் என கேட்ட போக்குவரத்து காவலர், அந்த தொகையை தராவிட்டால் ஜெயிலுக்கு போகவேண்டி இருக்கும் என்றும் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக லஞ்சம் கொடுக்காமல் ஜெயிலுக்கு சென்றவர், லஞ்சம்  கொடுத்து விடுதலை ஆனவர் என இருவரது வீடியோக்களை செல்போனில் காட்டி, பிருந்தாவனத்தை அச்சுறுத்தியுள்ளார். இதையடுத்து லஞ்ச பணத்தை கொடுத்து ஓட்டுநர் உரிமத்தை மீட்ட பிருந்தாவனம், கூடவே போக்குவரத்து காவலர்களின் லஞ்ச வேட்டையும் வீடியோவாக வெளிக்காட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்