ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை : கொலையாளிகள் குறித்து காவல்துறை விசாரணை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை : கொலையாளிகள் குறித்து காவல்துறை விசாரணை
x
சங்கராப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னத்தங்கம் என்ற ராதாகிருஷ்ணன், இன்று காலை மூலக்கடை அருகே உள்ள அரசு மாதிரிப் பள்ளி எதிரில் நின்று ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, கருப்பு நிற ஸ்கார்பியோ காரில் வந்து இறங்கிய மர்ம நபர்கள், அவரை நோக்கி ஓடி வந்தனர். பயந்துபோன ராதாகிருஷ்ணன் தப்பியோடிய போது, விரட்டிச்சென்று, சரிமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்றது. பலத்த காயம் அடைந்த ராதாகிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர்  மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக ஈரோடு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், ராதாகிருஷ்ணனை கொலை செய்தது யார் என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்