பட்டியலின நல ஆணையத்தை கலைக்க கோரி மனு : "வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" - உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
தேசிய பட்டியலின நல ஆணையத்தை கலைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மதுரையை சேர்ந்த செல்வகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், குடியரசு தலைவருக்கு மறைமுகமாக உத்தரவு பிறப்பிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அரசியல் சாசன அமைப்பை கலைக்க கோரும் இந்த வழக்கை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 17ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Next Story

