மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - ஆசிரியர், மாணவன் போக்சோவில் கைது

கோவை மாநகரில் பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி ஆசிரியர், கல்லூரி மாணவன் ஆகிய இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - ஆசிரியர், மாணவன் போக்சோவில் கைது
x
அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நடராஜன், ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, துடியலூர் மகளிர் காவல்நிலையம், ஆசிரியர் நடராஜனை போக்சோவில் கைது செய்தனர். இதேபோல், பெரியநாயக்கன்பாளையத்தில், கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி, தற்கொலைக்கு காரணமானதாக கூறி, அந்த மாணவியின் காதலன் தயாநிதியை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இளைஞர் தயாநிதி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 


Next Story

மேலும் செய்திகள்