சாமந்திப்பூ தோட்டங்கள் அழிப்பு - உரிய விலை கிடைக்காததால் வேதனை
சேலம் மாவட்டம் ஓமலுர் பகுதியில் சாமந்தி பூ தோட்டங்களை விவசாயிகள் அழித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலுர் மற்றும் காடையாம்பட்டி தாலுக்காவில் அதிக அளவில் சாமந்திப்பூ பயிரிடப்பட்டுள்ளது. முக்கியமாக பூசாரிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, தாராபுரம், கொங்குப்பட்டி மூக்கனுர் தும்பிபாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாமந்திப் பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது சாமந்திப்பூக்களை உரிய விலைக்கு வாங்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதியில் தோட்டங்களை விவசாயிகள், அழித்து வருகின்றனர். தங்களது நஷ்டத்திற்கு அரசு உரிய இழப்பீடு தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

