அரசுப்பள்ளிக்கு ரூ. 3 லட்சம் மதிப்புள்ள கல்வி சீர்வரிசை - ஊர்வலமாக எடுத்து வந்து வழங்கிய கிராம மக்கள்
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வேகாக்கொல்லை கிராம மக்களின் சார்பாக அங்குள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு 3 லட்ச ரூபாய் மதிப்பிலான கல்வி சீர்வரிசை வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வேகாக்கொல்லை கிராம மக்களின் சார்பாக, அங்குள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு 3 லட்ச ரூபாய் மதிப்பிலான கல்வி சீர்வரிசை வழங்கப்பட்டது. அதன்படி, ஸ்டீல் பீரோ, டேபிள், ஃபேன், டிவி உள்ளிட்ட பொருட்களும் கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன. முன்னதாக, இப்பொருட்களை கிராம மக்கள், ஊர்வலமாக எடுத்து வந்து அரசு பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினர். இந்த விழாவில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Next Story

