ஓசூரில் தி.மு.க. பிரமுகர் வெட்டிக் கொலை

ஓசூர் அரசு பள்ளி மைதானத்தில் நடைப் பயிற்சியின் தி.மு.க. நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓசூரில் தி.மு.க. பிரமுகர் வெட்டிக் கொலை
x
ஓசூர் இமாம்பாடா பகுதியை சேர்ந்தவர் மன்சூர்அலி.  ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்த அவர், தி.மு.க. மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளராக இருந்து வந்தார். நேற்று மாலை ஓசூர் அரசு பள்ளி மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மன்சூர் அலி சிறிது நேரம் ஓய்வு எடுத்துள்ளார். அவரது நண்பர்கள் நடைபயிற்சி மேற்கொண்ட நிலையில், மன்சூர் அலியை கண்காணித்து வந்த மர்ம கும்பல், பயங்கர ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டது.  மன்சூரின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு,  தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு தி.மு.க.வினர் குவிந்த நிலையில், துணைக் கண்காணிப்பாள​ர் சங்கு சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியுள்ளார். தலைமறைவான 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்