வனப்பகுதியில் பதுங்கியிருந்த 8 பேர் கைது : நாட்டுதுப்பாக்கிகள், கத்திகள், கார்கள் பறிமுதல்
திருவள்ளூர் மாவட்டம் வலசை வெட்டிக்காடு வனப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் வலசை வெட்டிக்காடு வனப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த 8 பேர் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 4 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 7 கத்திகள், 2 கார்கள் ஆகிவற்றை பறிமுதல் செய்தனர். அவர்கள் எட்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
Next Story

