வீட்டில் நோட்டமிட்டு கொள்ளையடித்த மர்ம நபர்கள் - 10 பவுன் நகைகள் திருட்டு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில், அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டில் நோட்டமிட்டு கொள்ளையடித்த மர்ம நபர்கள் - 10 பவுன் நகைகள் திருட்டு
x
நெல்லை மாவட்டம் வள்ளியூரில், அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் இசக்கிமுத்து என்பவரின் வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆசிரியரான இவரது மனைவி, ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இசக்கிமுத்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக ராமேஸ்வரத்திற்கு சென்றிருந்த போது,  வீட்டின் பின்பக்க கதவை உடைத்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 10 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வள்ளியூர் போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்