"புதிய கல்வி கொள்கை : தன்னிச்சையாக வெளியிட கூடாது" - ராமதாஸ்
பட்ஜெட் உரையில் இடம் பெற்ற, புதிய தேசிய கல்வி கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு தேவையற்றது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் உரையில் இடம் பெற்ற, புதிய தேசிய கல்வி கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு தேவையற்றது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு தன்னிச்சையாக வெளியிட கூடாது என்று கூறியுள்ளார். மேலும், அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி அதில், புதிய கல்வி கொள்கை குறித்து கருத்தொற்றுமை ஏற்பட்டால் மட்டுமே, அதனை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Next Story

