பணியாளர் தேர்வாணைய முறைகேடு விவகாரம் - தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது

பணியாளர் தேர்வாணைய முறைகேடு விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
பணியாளர் தேர்வாணைய முறைகேடு விவகாரம் - தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது
x
குரூப் 4 தேர்வில் 288 மதிப்பெண் பெற்று, தமிழக அளவில்  எட்டாவது இடத்தில் பண்ருட்டியை சேர்த்த சிவராஜ் என்பவர் தேர்வானார். இவர் மோசடியாக தேர்வு எழுதியது அம்பலமானதால், தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், செல்போன் சிக்னல் மூலம் அவரை கண்டுபிடித்த சிபிசிஐடி போலீசார், பண்ருட்டி பேருந்து நிலையத்தில்  கைது செய்தனர். இதுபோல, இன்று மாலையில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, கைதானவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்