13 வயது சிறுமியின் வயிற்றில் அரை கிலோ தலைமுடி, சேம்பு பாக்கெட்

கோவையில் 13 வயது சிறுமியின் வயிற்றில் இருந்த சுமார் அரை கிலோ தலைமுடி, சேம்பு பாக்கெட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
x
வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமி, கோவையில் உள்ள  வி.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை ஸ்கேன் செய்த மருத்துவர்கள், சிறுமியின் உடலில் கட்டி போன்ற ஒரு வடிவம் இருப்பதாக கூறினார்.  அதை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டுமென தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் சிறுமியின் வயிற்றில் இருந்த  தலைமுடி, ஷாம்பு பாக்கெட் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை, மருத்துவர்கள் குழு, அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியது. 

Next Story

மேலும் செய்திகள்