குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் - அரசு ஊழியர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்

குரூப் 4 முறைகேடு குறித்த சிபிசிஐடியின் விசாரணை 4-வது நாளாக தொடரும் நிலையில், இந்த விவகாரத்தில் சிக்கிய இரண்டு அரசு ஊழியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் - அரசு ஊழியர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்
x
கல்வி மற்றும் எரிசக்தி துறை அதிகாரிகள், இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின் படி, பள்ளிக்கல்வித் துறையை சேர்ந்த ஊழியர் ரமேசும், எரிசக்தி துறையை சேர்ந்த திருக்குமரனும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று கைதான டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன், நாளை பணி இடைநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து,சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், நான்காவது நாளாக விசாரணை தொடர்கிறது. இதற்காக, இடைத்தரகர்கள், டிஎன்எஸ்பிசியில் தேர்வான அதிகாரிகள், தேர்வுத்தாள் பாதுகாப்பு பணிக்கு வந்த காவலர்கள் உள்ளிட்டோர் ஆஜராகியுள்ளனர். மேலும், சென்னையில் கைதான மூவரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். குரூப் 4 முறைகேடு விவகாரத்தில் இதுவரை ஒன்பது கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்