கன்னியாகுமரி : யாசகம் செய்து அரசு பள்ளிகளுக்கு உதவும் முதியவர்

கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு தம்மால் முடிந்த உதவியை செய்வதற்காகவே முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கன்னியாகுமரி : யாசகம் செய்து அரசு பள்ளிகளுக்கு உதவும் முதியவர்
x
கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு தம்மால் முடிந்த உதவியை செய்வதற்காகவே முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர்பாண்டி. வசதியான குடும்பத்தில் பிறந்த இவர், தனது மகன், மகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு, மனைவி இறந்ததும், திருச்செந்தூரில் பிச்சை எடுத்து வந்துள்ளார். இதில் நல்ல வருமானம் கிடைத்துள்ளது. இதை கொண்டு அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு உதவ வேண்டும் என்று எண்ணிய அவர், அந்தந்த பள்ளி இருக்கும் பகுதியில் சென்று பிச்சை எடுத்து உதவுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதன் படி, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்திற்கு உட்பட்ட  மூன்று அரசு பள்ளிகளுக்கு தாம் பிச்சை எடுத்து சம்பாதித்த காசு கொண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் சாதனத்தை வழங்கியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்