சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவு - நடவடிக்கை என்ன?

சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவு செய்தவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவு - நடவடிக்கை என்ன?
x
உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட மருதாச்சலம் என்பவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சமீபகாலமாக உயர் பதவி வகிப்பவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தாக்கி அவதூறு கருத்துகளை பதிவிடுவது அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, அத்தகைய கருத்து தெரிவிப்பவர்களை கண்டுபிடிக்க நடைமுறை உள்ளதா என்பது குறித்து அறிக்கை அளிக்க சைபர் கிரைம் பிரிவுக்கு உத்தரவிட்டார். மேலும், உயர் பதவி வகிப்பவர்கள் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி-க்கு உத்தரவிட்டார்.  பின்னர் இதுபோன்ற கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிடமாட்டேன் என மனுதாரர் உத்தரவாதம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜனவரி 29ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்