ராமர் படத்துடன் ஆன்மீக ஊர்வலம் செல்ல முயற்சி - பாஜகவினரை கைது செய்த போலீசார்

சேலத்தில் ராமர் படத்துடன் ஆன்மீக ஊர்வலம் செல்ல முயன்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ராமர் படத்துடன் ஆன்மீக ஊர்வலம் செல்ல முயற்சி - பாஜகவினரை கைது செய்த போலீசார்
x
சேலத்தில் 1971ல் பெரியார் தலைமையில் நடந்த பேரணி குறித்து நடிகர் ரஜினி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் சேலம் மாவட்ட பாஜக சார்பில் செவ்வாய்பேட்டையில் ராமர் சீதை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து ஊர்வலம் செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி ஊர்வலம் நடத்த முயன்றனர். ஆனால் போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ஊர்வலம் செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்