"இருளில் மூழ்கி உள்ள அனந்தசரஸ் குளம்"- அத்திவரதரை தரிசிக்க முடியாத பக்தர்கள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசாரஸ் குளம் இருளில் மூழ்கி உள்ளதாக பக்கதர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இருளில் மூழ்கி உள்ள அனந்தசரஸ் குளம்- அத்திவரதரை தரிசிக்க முடியாத பக்தர்கள்
x
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசாரஸ் குளம் அறநிலையத்துறையினரின் அலட்சிய போக்கினால் இருளில் மூழ்கி உள்ளதாக பக்கதர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 
அத்திவரதர் உற்சவத்தின் போது,  48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளித்த அத்திவரதர், மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் வைக்கப்பட்டார். அத்திவரதரை தரிசிக்க முடியாதவர்கள் கோயிலுக்கு வந்து  அனந்தசரஸ் குளத்தை தரிசித்து செல்கின்றனர். இந்த நிலையில், அறநிலையத்துறையின் அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் இரவு நேரங்களில் அனந்தசரஸ் குளத்தில் மின்விளக்கு எரியாமல், இருளில் மூழ்கி இருப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே, மின் விளக்குகளை அமைத்து  உரிய முறையில்  பராமரிக்க வேண்டும் எனவும், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்