குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் சிக்கிய 99 பேருக்கு வாழ்நாள் தடை

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் சிக்கிய 99 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
x
குரூப் 4 பதவிகளுக்கான போட்டி தேர்வில் நடந்த முறைகேடு, தமிழகத்தை அதிர வைத்துள்ளது. இந்த முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை தொடங்கிய நிலையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. உடனே அழியும் சிறப்பு மையினால் தேர்வு எழுதி மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. இடைத்தரகர்கள் உதவியுடன் 52 தேர்வர்கள் விடைத்தாள்களில் திருத்தம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குரூப்-4 முறைகேட்டில் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய மையங்களில் தேர்வு அதிகாரியாக இருந்த 2 வட்டாசியர்களை ரகசிய இடத்தில் வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே குரூப் 4 முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு போட்டிதேர்வு எழுத வாழ்நாள் தடை விதித்து டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட 39 பேருக்கு பதில் தகுதியான நபர்களை தேர்வு செய்து புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட முடிவு செய்துள்ளது. குரூப் 4 முறைகேடு புகார் குறித்த சிபிசிஐடி விசாரணையில் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்