5, 8 வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு நடத்த எதிர்ப்பு : நல்லாசிரியர் விருதை திருப்பி கொடுக்க முயன்றதால் அதிர்ச்சி

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லாசிரியர் விருதை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி அளிப்பதாக தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5, 8 வகுப்புக்களுக்கு  பொதுத்தேர்வு நடத்த எதிர்ப்பு  : நல்லாசிரியர் விருதை  திருப்பி கொடுக்க முயன்றதால் அதிர்ச்சி
x
நல்லம்பள்ளி ஒன்றியம் சோலியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர் அல்லிமுத்து. இவர்  தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ஐந்து  மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு பொது தேர்வு நடத்துவதை கைவிட வேண்டும் என்றும் அவ்வாறு தேர்வு நடத்தப்பட்டால் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை மட்டுமல்லாமல் மன வளர்ச்சியும் பாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த 2014-ஆம் ஆண்டு தமக்கு அளிக்கப்பட்ட நல்லாசிரியர் விருதுக்கான சான்றிதழையும் மாவட்ட ஆட்சியர் மலர்விழியிடம் அவர் கொடுக்க முயன்றார்.  ஆனால் மனுவை மட்டும் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர், இது தொடரபாக  தமிழக அரசுக்கு தெரிவித்து உரிய பதில் பெற்று தருவதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்