தஞ்சை விமானப்படை தளம் தரம் உயர்த்தம் - 8 போர் விமானங்கள் தஞ்சையில் முகாம்

தஞ்சை விமானப்படை தளம் 8 விமானங்கள் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை உடன் நிரந்தர விமானப்படைத்தளமாக இன்று தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
தஞ்சை விமானப்படை தளம் தரம் உயர்த்தம் - 8 போர் விமானங்கள் தஞ்சையில் முகாம்
x
தஞ்சை விமானப்படை தளத்தில் சுகாய் போர் விமானங்களை இயக்குவதற்கு தேவையான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றது. கடந்த 2013 ஆம் ஆண்டு தஞ்சை விமானப்படை தளத்தை அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி தரம் உயர்த்தி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதைத்தொடர்ந்து சுகாய் விமானங்கள் மூலம் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. சுகாய் 30 ரக போர் விமானங்கள் தரை இலக்கை நோக்கி பிரம்மோஸ் ஏவுகணை வீசும் சோதனை கடந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதையடுத்து தஞ்சை விமானப்படை தளம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தரம் உயர்த்தப்பட்டு பணிகள் படிப்படியாக நடைபெற்றது. இங்கு 8 சுகாய் ரக விமானங்கள் கொண்ட விமானப்படை தளமாக நிரந்தரமாக நிறுத்தப்பட்டது. இன்று முதல் விமானப் படை தளத்தில் சுகாய் 30 ரக போர் விமானங்களுடன் பிரமோஸ் ஏவுகணை நிறுத்தப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் விமான சாகசங்கள் நடைபெற்றன.


Next Story

மேலும் செய்திகள்