டிஎன்பிஎஸ்சியில் 10 உறுப்பினர் பணியிடங்கள் காலி
பதிவு : ஜனவரி 19, 2020, 09:42 PM
டி.என்.பி.எஸ்.சி.-யின் தலைவராக இருக்கும் அருள்மொழி, மார்ச் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் போதிய உறுப்பினர்களும் இல்லாததால் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மொத்தம் 13 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். 10 உறுப்பினர்கள் பதவி இடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்போது தலைவராக உள்ள அருள்மொழியின் பதவிக்காலமும் வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால், தேர்வாணைய பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு துறைகளுக்கெல்லாம் ஆட்களை தேர்வு செய்யும் அமைப்பிலேயே ஏராளமான பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பது, நிர்வாகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தமிழக அரசு உடனடியாக காலியாக உள்ள 10 உறுப்பினர் பதவிகளை நிரப்பவும், அடுத்த தலைவரை நியமனம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளவும் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பிற செய்திகள்

நிஸர்கா புயல் நாளை மறுநாள் கரையை கடக்கிறது

நிஸர்கா புயல் நாளை மறுநாள் மகாராஷ்டிராவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

91 views

41 சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயம் : விசாரணை நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கு - டிஜிபி பதிலளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம்

நாற்பத்தியொரு, சிலை கடத்தல் வழக்குகளின் ஆவணங்கள் மாயமானது குறித்து விசாரிக்க கோரிய வழக்கில் டிஜிபி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

8 views

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு நான்காயிரத்து 159 கனஅடியாக அதிகரித்துள்ளது.

84 views

தமிழகத்தில் மேலும் 1162 பேருக்கு கொரோனா தொற்று...

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

14 views

வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் - பெற்றோரிடம் கருத்து கேட்க உத்தரவு

கொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து நாளை பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

100 views

"மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை மையம்" - சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்

கொரோனா தொற்று அறிகுறியுடன் வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.