சரபங்கா ஆற்றில் கொட்டப்படும் ஆலை கழிவுகள் - நிலத்தடி நீர் மாசுபடுவதாக குற்றச்சாட்டு

ஓமலூர் சரபங்கா ஆற்று பகுதியில் கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீர் மாசுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சரபங்கா ஆற்றில் கொட்டப்படும் ஆலை கழிவுகள் - நிலத்தடி நீர் மாசுபடுவதாக குற்றச்சாட்டு
x
ஓமலூர் சரபங்கா ஆற்று பகுதியில் கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீர் மாசுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், சரபங்கா ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தொழிற்சாலைகளின் கழிவுகளும் நதியில் நேரடியாக கலக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என புகார் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், மீன், மாமிசம் மற்றும் தோல் கழிவுகளும் நேரடியாக கொட்டப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்