குண்டு பாய்ந்து குரல் மாறியும் நிரந்தர ஹீரோ - "எம்.ஜி.ஆரின் திரையுலக பயணம்"

தமிழ் திரையுலகின் காலத்தை வென்ற காவிய நாயகனான எம்ஜிஆரின் பிறந்த நாளில் அவரது திரையுலக பயண செய்தி
குண்டு பாய்ந்து குரல் மாறியும் நிரந்தர ஹீரோ - எம்.ஜி.ஆரின் திரையுலக பயணம்
x
தமிழ் திரையுலகில் கால் நூற்றாண்டுகளுக்கு மேல் வசூல் சக்கரவர்த்தியாக கோலோச்சிய எம்ஜிஆர், தனது 20வது வயதில் சதி லீலாவதி படத்தில் அறிமுகமானார். கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன், டிஎஸ் பாலையா, கதாசிரியர் ஜெமினி எஸ்எஸ் வாசன், அன்றைய பிரபல இயக்குநர் எல்லீஸ் ஆர்.டங்கன் என பலருக்கும் அந்த படம் தான் அறிமுகம்.

அதன்பிறகு, நீண்ட போராட்டத்துக்கு பின், 10 ஆண்டுகள் கழித்து ராஜகுமாரி படத்தின் மூலமாக கதாநாயகன் ஆனார், எம்ஜிஆர். ஆனாலும், அவருக்கு பெயர் வாங்கித் தந்த படம் '1950ல் கருணாநிதி கதை வசனத்தில் வெளியான மந்திரி குமாரி'

அந்த படத்துக்கு பிறகு, எம்ஜிஆரின் வெற்றிப் பயணத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அந்தக் கால கமர்சியல் ஹீரோவாக உச்சத்தை தொட்டார் எம்ஜிஆர். அவரது சண்டைக் காட்சிகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

தாய்க்குபின் தாரம் படத்தில் சிலம்பு சண்டை...
நாடோடி மன்னன் படத்தில் வாள் சண்டை...

சண்டைக் காட்சிகள் மட்டுமல்ல... காதல், நகைச்சுவை என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஃபுல் மீல்ஸ் படங்களாகவே கொடுத்ததால், தமிழ் திரையுலகின் உச்சத்தை தொட்டார், எம்ஜிஆர்.

என் அண்ணன் படத்தில் சலக்கு சலக்கு சிங்காரி... பாடல்..
அன்பே வா படத்தில்... ஒரு பெண்ணை பார்த்து... 

திமுகவில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்ததால், தனது படங்களில் கட்சி கொள்கைகளை புகுத்துவதிலும் அவர் தவறவில்லை. காங்கிரஸ் சார்பு தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தயாரித்த அன்பே வா படமும் கூட அதற்கு தப்பவில்லை...

நம்நாடு.. படத்தில் வாங்கய்யா வாத்தியாரய்யா பாடலில்... சூரியன் உதிச்சாலே...
அன்பே வா படத்தில்... புதிய சூரியனின் பார்வையிலே.. உலகம் விழித்துக் கொண்ட வேளையிலேயே..
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் பாடல்...

மூன்று முறை எமனின் வாசல் வரை சென்று திரும்பியவர், எம்ஜிஆர். 1967ம் ஆண்டு துப்பாக்கியால் சுடப்பட்டு குரலில் மாற்றம் ஏற்பட்டாலும் கூட, முதலிடம் அவரிடமே நிரந்தரமாக இருந்தது.
 
நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பு, இயக்கம் எனவும் முத்திரை பதித்தவர் எம்ஜிஆர். 1958ல் வெளியான நாடோடி மன்னன், 1973ல் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்கள் இவரது இயக்கம் தான்...

நடிப்புக்கு முழுக்கு போட்டு தமிழக முதல்வரானதால், எம்ஜிஆர் நடித்த 'அண்ணா நீ என் தெய்வம்' என்ற படம் பாதியிலேயே நின்று போனது. இதனால், அவரது கடைசி படமாக அமைந்தது, மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்.

எம்ஜிஆர் நடித்து பாதியில் நின்று போன 'அண்ணா நீ என் தெய்வம்' படத்தின் காட்சிகளை பயன்படுத்தி 'அவசர போலீஸ் 100' என்ற படத்தை 1990ம் ஆண்டு வெளியிட்டார், கே.பாக்யராஜ். 

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு வெளியான இந்த படம், தமிழில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்தது. இந்த வெற்றியே, எம்ஜிஆரின் நிரந்தர திரையுலக புகழுக்கு சாட்சி..


Next Story

மேலும் செய்திகள்