காவல்துறை - சீருடை அலுவலர்களுக்கு : பொங்கல் பதக்கம் வழங்க முதலமைச்சர் ஆணை
பதிவு : ஜனவரி 14, 2020, 03:06 PM
மூவாயிரத்து 186 காவல்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பொங்கல் பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக காவல், தீயணைப்பு - மீட்புப்பணி மற்றும் சிறைத் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில்,  ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள்  அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு, காவல்துறையை சேர்ந்த மூவாயிரம் பேருக்கும், 120 அலுவலர்களுக்கும், சிறைத் துறையில்  60 பேருக்கும், தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப் பதக்கங்கள்' வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த  பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலை வேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி 400 ரூபாய்,  பிப்ரவரி ஒன்றாம்  தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  காவல் வானொலி பிரிவு,  நாய் படைப் பிரிவு மற்றும் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என, ஆக மொத்தம்  6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்' அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1933 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

266 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

69 views

பிற செய்திகள்

ஆளுநர் மாளிகையில் சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறப்பு - வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது உருவ சிலையை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

103 views

"கோட்டபய-வின் அறிவிப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" - நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

கோட்டபய-வின் அறிவிப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

28 views

"தனக்கு யாரும் தர சான்றிதழ் வழங்க வேண்டியது இல்லை" - பொன். ராதாகிருஷ்ணன்

தனக்கு யாரும் தர சான்றிதழ் வழங்க வேண்டியது இல்லை என்றும் கூட்டணி தர்மத்திற்காக மெளனமாக உள்ளதாகவும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

40 views

"ராயலசீமாவுக்கு நீங்கள் செய்தது என்ன?" - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம்

ராயலசீமாவுக்கு எதிரான மனநிலைதான் அமராவதியை சந்திரபாபு நாயுடு தலைநகராக்கியதற்கு காரணம் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தெரிவித்த கருத்துக்கு சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

10 views

தேனி ஆவின் பால் உற்பத்தியாளர் சங்க வழக்கு - இடைக்கால குழுவின் நியமனம் ரத்து

தேனி மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவின் நியமனத்தை, உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

12 views

"தொழில்துறையில் தமிழகம் முன்னணி" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

நாட்டிலேயே தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

72 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.