சென்னை சென்ட்ரலில் காணாமல் போன குழந்தை மீட்பு
பதிவு : ஜனவரி 14, 2020, 08:43 AM
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 2 வயது குழந்தையை கடத்திய நபரை திண்டுக்கல்லில் கைது செய்த போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த மெர்ஜினா என்ற பெண்ணின் 2 வயது பெண் குழந்தை ரசிதா   சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 
தூங்கி கொண்டிருந்த போது  கடத்தப்பட்டார் .  அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு ரயில்வே போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர் ..  இந்நிலையில் மும்பையிலிருந்து நாகர்கோவில் செல்லும் விரைவு ரயில் திண்டுக்கல் அருகே  வந்த போது சந்தேகத்திற்கு இடமான நிலையில் கையில் குழந்தையை ஒருவர் வைத்திருப்பதை கண்ட ரயில் பயணிகள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த ரயில் பெட்டியில் ரோந்து பணியில் இருந்த  போலீசார் விசாரணை செய்ததில் அந்த நபர்  மேற்கு வங்கத்தை  சேர்ந்த தீபக் மண்டல் என தெரிய வந்தது. அவர் முன்னுக்குபின் தகவல் அளித்ததால் அந்த 2 வயது குழந்தை மற்றும்  தீபக் மண்டல் என்பவரையும் திண்டுக்கல் ரயில்வே போலீசாரிடம்  ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அந்தக் குழந்தை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காணாமல் போன குழந்தை என்பது தெரியவந்தது. பின்னர் கடத்தி வரப்பட்ட குழந்தை ரசீதா மற்றும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட தீபக் மண்டல் ஆகிய இருவரையும் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

285 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

141 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

90 views

பிற செய்திகள்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ராமேஸ்வரத்தில் பூஜை - பூஜை செய்த மணலை மிதிவண்டியில் எடுத்துக்கொண்டு பயணம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இந்து முன்னணியின் சார்பில் பூஜை செய்யப்பட்டது.

95 views

பொதுத்துறை வங்கி தேர்வு - கணினி சர்வரில் பழுது

மதுரை அழகர்கோயில் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் நடந்த வங்கி எழுத்தர் பணிக்கான ஆன்லைன் தேர்வின்போது கணினி சர்வரில் திடீரென பழுது ஏற்பட்டது.

5 views

நீலகிரி : ரேஷன் கடையில் இருந்த அரிசியை சாப்பிட்ட யானைகள்

நீலகிரி அருகே ரேஷன் கடை மற்றும் மளிகை கடைக்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திச் சென்றது.

5 views

மு.க.அழகிரியை திமுகவில் இணைக்க ஆதரவாளர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் உள்ள தனது ஆதரவாளர் இல்ல காதணி விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கலந்து கொண்டார்.

1889 views

டி.என்.பி.எஸ்.சி ஆலோசனை கூட்டம் - சென்னையில் இன்று நடைபெறவில்லை

குரூப் - 4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவில்லை.

2 views

"இலங்கைக்கு இந்தியா எந்த உதவியும் வழங்க கூடாது" - பாமக நிறுவனர் ராமதாஸ்

இலங்கை ராணுவத்துக்கு பாதுகாப்பு கருவிகளை வாங்க 50 மில்லியன் டாலர் நிதி வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.