கிராம‌ப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் விளையாட்டு திட்டம் - முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
பதிவு : ஜனவரி 13, 2020, 02:00 PM
கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், இளைஞர் விளையாட்டுதிட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், இளைஞர் விளையாட்டுதிட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சட்டப்பேரவையில் கடந்த ஜூலை மாதம் 110 வது விதியின் கீழ் இந்த திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும், பேரூராட்சிகளுக்கும் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் செயல்படுத்த, 76 கோடியே 23 லட்சத்து 9 ஆயிரத்து 300 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உருவாக்கப்படும் விளையாட்டு மைதானங்களில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்த திட்டத்தை முதலமைச்சர் தலைமை செயலகத்தில் இருந்து  தொடங்கி வைத்தார். 

பிற செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - ஏராளமான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

33 views

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஜிசாட்-30 செயற்கைக்கோள்

இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் 30 செயற்கைக்கோள் இன்று அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

340 views

"சமூக வலைதளத்தில் தன்னை பற்றி பலர் அநாகரீகமாக கருத்து"- நெல்லை கண்ணன் மத்திய வெளியுறவு அமைச்சருக்கு புகார் கடிதம்

சமூக வலைதளத்தில் தன்னை பற்றி ஆபாசமாகவும் அநாகரிகமாகவும் பலர் கருத்து தெரிவித்து வருவதாக இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

2106 views

10 அடி குழிக்குள் தவறி விழுந்த 4 வயது சிறுமி, சாதுரியமாக செயல்பட்டு சிறுமியை மீட்ட இளைஞர்கள்

விழுப்புரம் அருகே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் தவறி விழுந்த 4 வயது சிறுமியை அப்பகுதி இளைஞர்கள் சாதுரியமாக மீட்டுள்ளனர்.

5303 views

மாமல்லபுரத்தை பார்வையிட்ட மத்திய அமைச்சர் : "மத்திய அரசு நிதியுதவி அளிக்க தயார்"

மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட்டார்.

23 views

நாராயணசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு:"விசாரணை மேற்கொண்டால் ஒத்துழைக்க வேண்டும்"- துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மீது விசாரணை மேற்கொண்டால் ஒத்துழைக்க வேண்டும் என்று அம்மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.