சில்லறை வாங்குவது போல திருடி சென்ற மர்ம நபர் - சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமாகிய திருட்டு
பதிவு : ஜனவரி 13, 2020, 12:19 PM
சென்னை தாம்பரம் அருகே மருந்து கடையில் சில்லறை வாங்குவது போல் நடித்து மர்மநபர் நூதன முறையில் பணத்தை திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடைக்கு வந்த மர்ம நபர் 10 ரூபாய்க்கு மருந்து வாங்கி விட்டு, ஐந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, 10 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை கேட்டுள்ளார். கடைக்காரர் இருபது 500 ரூபாய் நோட்டுகளை திருப்பி கொடுத்துள்ளார். அதை பெற்று கொண்ட நபர், 100 ரூபாய் தாள்களாக இல்லையா எனக்கூறி பேச்சு கொடுத்து, சில்லறை வேண்டாம் எனக்கூறி பணத்தை திருப்பி கொடுத்து விட்டு, 10 ஆயிரம் ரூபாயை பெற்று கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் கடையில் இறுதி கணக்கை சரி பார்த்த போது 5 ஆயிரம் ரூபாய் குறைவாக இருந்ததால் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, அந்த மர்ம நபர் பணத்தை திருப்பி கொடுக்கும் போது, 5 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டது தெரிய வந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிற செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிப்பு

முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளனர்.

6 views

சென்னையில் கொரோனா பரவல் தீவிரம் - 15 மண்டலம் வாரியாக குழுக்கள் அமைப்பு

சென்னையில் புதிய கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, 15 மண்டலம் வாரியாக குழுக்கள் அமைத்து கண்காணிக்கும்படி மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

16 views

வருவாய் பற்றாக்குறை நிதி: தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.183.67 கோடி ஒதுக்கீடு

வருவாய் பற்றாக்குறை மானியமாக 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு 9 ஆயிரத்து 871 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு 183.67 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

60 views

முதலமைச்சராக பொறுப்பேற்றார் மு.க. ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் அமோக வெற்றியை பெற்றது. 125 இடங்களில் வென்ற திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது.

45 views

"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் ..."- முதல்வரானார் முக ஸ்டாலின்

தமிழகத்தின் 23-வது முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின்

1263 views

தமிழகத்தின் 14வது முதல்வர் மு.க.ஸ்டாலின் - இன்று காலை 9 மணிக்கு பதவியேற்பு விழா

தமிழகத்தின் 14வது முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பதவியேற்கிறார்.

647 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.